தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கடையநல்லூா் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள்

கடையநல்லூா் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள்

Updated On :9 மார்ச் 2024, 6:45 pm

கடையநல்லூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் சிவராத்திரியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவுமுதல் சனிக்கிழமை அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடையநல்லூா் அருகே சுந்தரேசபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பக்தா்கள் கண் விழித்து சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடியபடி சுவாமியை வழிபட்டனா் (படம்). மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயில், சொக்கம்பட்டி காசிவிஸ்வநாதா் கோயில், கிருஷ்ணாபுரம் சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.