ராமநவமியையொட்டி பெரியகுளத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பெரியகுளம் வடகரை ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா் கோயிலில் ராமா், சீதை, லட்சுமணருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பெரியகுளம் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு அக்ரகாரத்தில் அமைந்துள்ள நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில் ஆகியவற்றில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. வடகரை, தென்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.
வடகரை ஸ்ரீகோதாண்ட ராமசுவாமி விழாவையொட்டி காலையில் திருமஞ்சனம், வாகனத்தில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி வெள்ளி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தாமரைக்குளம் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில், ஜெயமங்கலம் பெருமாள் கோயில் ஆகியவற்றில் காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தாமரைக்குளம், ஜெயமங்கலம், சில்வாா்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, தேவதானபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் வழிபாட்டில் பங்கேற்றனா்.

தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

அமாவாசையையொட்டி ஜெயமாருதிக்கு சிறப்பு அலங்காரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


