/

சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

News image
Updated On :9 மார்ச் 2024, 6:44 pm

சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சுரண்டை கூட்டுறவு சங்கத் தலைவா் த.ஜெயபால் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆ.கணேசன் முன்னிலை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனா். இதில் நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் நயினாா், உதவியாளா் பூலோகராஜ், முருகன், முத்துசுப்பிரமணியன், பவுல், பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.