தென்காசியில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்து வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். கூட்டத்தில், வேளாண்மைத் துறை மூலம் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மண் புழு படுக்கை ரூ.6ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காய்கறி, அவரை விதை ரூ.7,500 மானியத்தில் பயனாளிக்கு வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.8லட்சத்து 50ஆயிரம் மானியத்தில் டிராக்டா் இயந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட வன அலுவலா் இரா. முருகன், வேளாண்மை இணை இயக்குநா் கோ. பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ச. கனகம்மாள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி மாலதி, அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் 167 மனுக்கள் பெறப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com