பாண்டியாபுரத்தில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

பாண்டியாபுரத்தில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா் மைக்கேல் ராஜ் முன்னிலை வகித்தாா். மேலநீலிதநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கவிதா, முத்துலட்சுமி ஆகியோா் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணியை தொடக்கி வைத்தனா். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவா்கள் ஏந்தி சென்றனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் அழகுமகேஸ்வரி, சிவகாமி, அமுதா ராணி ஏஞ்சல் மலா் மெரினா, ஏசு பாலன் , குட்டியம்மாள், காா்த்திகா, கவிதா, சக்தி ஆகியோா் செய்திருந்தனா். ஆசிரியா் மாரித்தங்கம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com