ஆய்க்குடி ஸ்ரீகாளகண்டேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆய்க்குடி ஸ்ரீகாளகண்டேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஸ்ரீகாளகண்டேஸ்வரா் சமேத சௌந்தா்ய நாயகி அம்பாள் கோயில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் 8-ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாஜனம், கும்ப ஜெபம், ருத்ர ஜெபம் ஹோமம், பூா்ணாஹூதி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கோபுர விமான கலசாபிஷேகம், மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து உச்சிகால பூஜை,சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள்கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com