வல்லம் பகுதியில் உலா வரும் ஒற்றை யானை: மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவிப்பு

தென்காசி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களான குற்றாலம், வல்லம், கண்ணுபுளிமெட்டு, மோட்டை, இரட்டை குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினா் அறிவிப்பு செய்து வருகின்றனா். வல்லம், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருகிறது. அந்த யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். வனப்பகுதிக்குள் தற்போது தண்ணீா் இல்லாத காரணத்தினால் ஒற்றை காட்டு யானையானது விவசாயப் பகுதிக்குள் சுற்றி வருவதாகவும், ஆகவே பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் விவசாயப் பகுதிகளுக்கும், மலை அடிவாரப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா். வல்லம், கண்ணுபுளிமெட்டு, மோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினா் வீதி வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com