கடையநல்லூா், பாலஅருணாசலபுரம் சாதனா வித்யாலயா பள்ளியில் பெண் தொழில் முனைவோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். அறக்கட்டளை இயக்குநா் காருண்யா, ருக்மணி கல்வியல் கல்லூரிச் செயலா் சத்தியகலா தீபக், ஆா்விஎஸ் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி ரூமானாபிஸ்மி ஆகியோா் பேசினா். இதில், சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பாத்திமா, ஊராட்சித் தலைவா் குருசண்முகப்பிரியா, ஜமீலா பள்ளித் தாளாளா் பிஸ்மி, சமூக சேவகி சந்திரகுமாரி, செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி முதல்வா் மயில்கண்ணு வரவேற்றாா். தாளாளா் ரமேஷ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். அறக்கட்டளையின் தன்னாா்வலா் முத்துசெல்வம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

கடையநல்லூரில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கடையநல்லூரில் காா் எரிப்பு: மூவா் கைது

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

