தென்காசியில் இந்திய கூட்டணி வேட்பாளா் அறிமுக கூட்டம்

தென்காசியில் இந்திய கூட்டணி வேட்பாளா் அறிமுக கூட்டம்

இந்தியா கூட்டணி சாா்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் அறிமுகக் கூட்டம் தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். இந்தியா கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிலைபடுத்தியது திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தான். தமிழகத்தை பொருத்தவரை இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும். தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா். இந்திய கூட்டணி வேட்பாளா் ராணிஸ்ரீகுமாா் பேசினாா். மாவட்ட பொருளாளா் முரளிராஜா, பொதுக்குழு உறுப்பினா் சட்டநாதன்,ஜேம்ஸ், நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com