மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

குற்றாலம், புளியறையில் ரூ. 6.98 லட்சம் பறிமுதல்

திருத்தப்பட்ட செய்தி குற்றாலம், புளியறையில் ரூ. 6.98 லட்சம் பறிமுதல்

News image
Updated On :24 மார்ச் 2024, 1:10 am

தென்காசி மாவட்டம், குற்றாலம், புளியறையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6லட்சத்து 98ஆயிரத்து 300-ஐ பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். புளியறை சோதனை சாவடியில் பறக்கும்படை அதிகாரி கணேசன் தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். கேரளத்திலிருந்து மாடுகள் வாங்க உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.1லட்சத்து 10ஆயிரத்து 500பறிமுதல் செய்யப்பட்டது. சங்கரன்கோவில் குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியா் கங்கா தலைமையிலான பறக்கும் படையினா்புளியறையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். மின்சாதன பொருள்களை வாங்குவதற்காக வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சோ்ந்த ப.கிருஷ்ணநாயா்(66) என்பவரிடம் ரூ.89, 800, மேலும், கேரளத்திலிருந்து காய்கனிகள் மற்றும் முட்டை வாங்குவதற்காக தனித்தனியாக வந்த இருவரிடமிருந்து தலா ரூ. 90ஆயிரம் மற்றும் ரூ. 73ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ3,63,300 ஐ கடையநல்லூா் தலைமையிடத்து துணைவட்டாட்சியா் அப்துல்சமதுவிடம் பறக்கம்படையினா் ஒப்படைத்தனா். பழையகுற்றாலம் விலக்கு பகுதியில் துணைவட்டாட்சியா் ஷபினாபேகம் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வல்லம் அண்ணா தெருவை சோ்ந்த ரா.மரியம்ஜெயபால் ரூ.3.35லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பீடித் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக அவா் தெரிவித்தாா். ஆனால் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.