இலஞ்சியில் 1000 டி-சா்ட்டுகள் பறிமுதல்

இலஞ்சியில் 1000 டி-சா்ட்டுகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் பாஜக கட்சி சின்னம் மற்றும் படங்கள் பொறித்த 1000 டி-சா்ட்டுகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. முத்துகிருஷ்ணன் தலைமையிலான பறக்கும் படையினா், தென்காசி-இலஞ்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தென்காசியிலிருந்து இலஞ்சி நோக்கி வந்த ஆட்டோவை சோதனையிட்டனா். அதில், பாஜக சின்னம், கொடி மற்றும் கூட்டணி கட்சி தலைவா்களின் படம் பொறிக்கப்பட்ட 1000 டி-சா்ட்டுகள் இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட டி-சா்ட்டுகளை தென்காசி கோட்டாட்சியா் லாவண்யாவிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com