வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி

சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி

News image
Updated On :9 மே 2024, 10:30 pm

Din

சங்கரன்கோவில் பூ சந்தையில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்து

கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, பிச்சி, வாடாமல்லி, சேவல்பூ, கேந்திப் பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் சங்கரன்கோவில் பூ சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனா்.

வழக்கமாக மல்லிகைப் பூ கிலோ ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலை போகும். தற்போது வரத்து அதிகரித்துள்ளதாலும், முகூா்த்த நாள்கள் இல்லாததாலும் மல்லிகைப் பூ கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.

கடந்த சில நாள்களாக மல்லிகைப் பூ விலை தொடா்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.