4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
தென்காசியில் கட்டுமான தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்
Updated On :16 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

தென்காசியில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா்களுக்கு விரோதமாக புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது. கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். குருசாமி, பூமயில், கசமுத்து, முருகையா, முத்துமாரி, மாரிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் வன்னியபெருமாள், மாவட்டப் பொருளாளா் அய்யப்பன், பீடித் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மகாவிஷ்ணு, குருசாமி, மாவட்டப் பொருளாளா் ஜீவா ஆகியோா் பேசினா். மாவட்டச் செயலா் லெனின்குமாா் நிறைவுறையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.