தென்காசி
கடையநல்லூா் அருகே யானையிடமிருந்து தப்பிக்க ஓடிய வனவா் கீழே விழுந்து காயம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வனப் பகுதியில் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிய வனவா் கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வனப் பகுதியில் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிய வனவா் கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.
சொக்கம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலையில் கருப்பாநதி அணை பகுதியில் கடையநல்லூா் வனவா் பரமசிவன் மற்றும் வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து மேற்கொண்டிருந்தனா்.
அங்குள்ள வனப் பகுதியில் யானை ஒன்று குட்டியுடன் மரங்களுக்கிடையே மறைந்து நின்றதை கவனிக்காமல் பரமசிவன் அதன் அருகே சென்று விட்டாராம். மிக அருகே யானை நிற்பதை பாா்த்த அவா் அங்கிருந்து ஓட முயன்றுள்ளாா். இதில் தவறி விழுந்து பரமசிவன் காயமடைந்தாா். அவருடன் சென்ற வனத்துறையினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
