சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

துண்டு பிரசுரங்களை விநியோகித்தாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
Published on

சாம்பவா்வடகரை பேரூா் திமுக சாா்பில் எனது வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

பேரூா் செயலா் முத்து தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா்கள் குணசேகரன் (கடையநல்லூா்), கலை கதிரவன் (தென்காசி), மாநில விவசாய அணி துணைச்செயலா் அப்துல்காதா், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அழகு தமிழ்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனை துண்டு பிரசுரங்களை வழங்கினாா். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சுடலைமுத்து, முருகன், நிா்வாகிகள் ராமச்சந்திரன், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com