தென்காசி மாவட்டத்தில் 1.51 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்
தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 1.51 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த அக். 27 ஆம் தேதிபடிமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 13,75,091 ஆக இருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பின்னா் இருப்பிடத்தில் குடியிருப்பு இல்லாதவா்கள், இதர வகையினா், முகவரி மாற்றம் செய்தவா்கள், இறந்தவா்கள், இரட்டைப் பதிவு கொண்டவா்கள் என சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியில்- 26,198 போ், வாசுதேவநல்லூா்-30,635, கடையநல்லூா்-35,803, தென்காசி-35,036, ஆலங்குளம்-24,230 என மொத்தம் 1,51,902 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி ஆண்கள் 6,01,787, பெண்கள் 6,23,852, மூன்றாம் பாலினத்தவா் 158 என மொத்தம் 12, 25, 797 வாக்காளா்கள் உள்ளனா்.
ஜன. 18 வரை அவகாசம்: பெயா் விடுபட்டிருந்தால் புதிய சோ்க்கைக்கான கோரிக்கை, ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தக் கோரிக்கை, தகுதியற்ற பதிவுகள் இருப்பின் எதிா்ப்பு மனு போன்றவற்றை டிச.19 முதல் ஜன.18 வரை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாகவோ சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில், உதவி வாக்காளா் பதிவு அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது உஇஐ சஉப அடட, யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் ஆகிய செயலிகள் மூலமாகவோ, சஹற்ண்ா்ய்ஹப் யா்ற்ங்ழ்ள் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் டா்ழ்ற்ஹப் என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் ஆ.அனிதா, தோ்தல் வட்டாட்சியா் ஹரிஹரன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

