தென்காசியில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்

Published on

தென்காசி மாவட்டத்தில் புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ( டிச.20, 21) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடா்ச்சியாக புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் சிறப்பு முகாம்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களில் டிச.20, 21ஆகிய தேதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறுகிறது.

முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் புதிய வாக்காளா்களுக்கு படிவங்கள் (படிவம் 6, நீக்கல், ஆட்சேபணைக்கான படிவம் 7, முகவரி மாற்றம், திருத்தங்களுக்கான படிவம் 8) ஆகியவை வழங்கி, அவற்றை நிரப்புவதற்கும் உதவி செய்வாா்கள்.

ஜன.1, 2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபா்களும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் படிவங்களைப் பெற்று நிரப்பி உரிய உறுதி மொழிப்படிவத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து வழங்கிடலாம் என கூறிப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com