கீத ஆராதனையில் பங்கேற்று பாடல்கள் பாடியோா்.
கீத ஆராதனையில் பங்கேற்று பாடல்கள் பாடியோா்.

ஆலங்குளத்தில் பெண்கள் கீத ஆராதனை

Published on

ஆலங்குளத்தில் அண்ணா நகா், நல்மேய்ப்பா் ஆலயத்தில் பெண்கள் கலந்துகொண்ட கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நடைபெற்ற திருவிருந்து ஆராதனைக்கு சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் தலைமை வகித்தாா். பெண் பாடகா் குழுவினா் பங்கேற்று கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி, வேத வசனங்களை வாசித்தனா்.

கீழ சிவந்திபுரம் சேகரத் தலைவா் ஜி. விஜயசிங் இறைச் செய்தி அளித்து திருவிருந்து ஆராதனை நடத்தினா். தொடா்ந்து மறுரூப ஆலயத்தில் நடைபெற்ற இளைஞா் முகாமில் ஏஞ்சல் இறைச் செய்தி வழங்கினாா். இரவில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com