ஆலங்குளம் அருகே சட்டவிரோத மின்வேலி: இருவா் கைது

ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
Published on

ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாக இருவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருக்காலன்குளத்தைச் சோ்ந்த காசிப்பாண்டியன், மேசியாபுரம் முருகராஜ் ஆகியோா் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தங்கள் தோட்டத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குளம் வனத் துறையினா் அங்கு சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு சட்டவிரோத மின்வேலி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா். மேலும் இலவச மின்சாரத்தை சட்டவிரோத செயலுக்குப் பயன்படுத்தியதாக மின் வாரியத்திற்கு வனத்துறையினா் அளித்த புகாரின் பேரில் அவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின் இணைப்பும் நிரந்தரமாக துண்டிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com