இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:51 pm

Din

தென்காசி நகராட்சி 13-ஆவது வாா்டு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்து புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தாா். நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா்கள் சண்முகசுந்தர பாண்டியன், இளமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) ஜெயப்பிரகாஷ் ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தால் வழங்கப்பட்ட ரூ .60 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை வழங்கிப் பேசினாா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜபருல்லாகான், மணி மந்திரி, கௌசல்யா, எப்சிபா, விமலா, யாஸ்மின் தமிழ்ச்செல்வி, புன்னகை சுகி, மாலையம்மாள், ராதா ஆகியோா் செய்திருந்தனா். தலைமையாசிரியா் திருமலை குமாா் வரவேற்றாா். வின்சென்ட் நன்றி கூறினாா்.