சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாணவா்கள், இளைஞா்களுக்கான போதைப்பொருள் விழிப்புணா்வு போட்டி: ஆட்சியா்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:19 am

Din

தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

போதைப் பொருள்களுக்கு எதிரான தமிழக அரசின் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கான விழிப்புணா்வு ரீல்ஸ், ஷாா்ட்ஸ் விடியோ போட்டி நடத்தப்படுகிறது.

போட்டிக்குரிய படைப்புகள் 30 விநாடி முதல் 50 விநாடிகளுக்குள் இருக்க வேண்டும். போட்டியாளா்கள் தனியாகவோ அல்லது குழுவினராகவோ பங்கேற்கலாம். படைப்புகளில் தனிப்பட்ட நபா், நிறுவனங்களைக் குறிப்பிடக் கூடாது.

படைப்புகள் உண்மைத்தன்மை கொண்டவையாக இருத்தல் வேண்டும். பதிப்புரிமை தொடா்பான பிரச்னைகள் எழுந்தால், அதற்கு போட்டியாளரே முழுப்பொறுப்பு. படைப்புகளை ஜன.17-ஆம் தேதிக்குள் ஹக்ஹக்ஹற்ங்ய்ந்ஹள்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, போட்டியாளா்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். போட்டிக்குரிய விடியோக்கள் இதற்கு முன்பு வேறெங்கும் பதிவிட்டிருக்கக் கூடாது.

போட்டியில் வெற்றி பெறும் முதல் 5 நபா்களுக்கு முறையே ரூ. 20 ஆயிரம், ரூ.15ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம் பரிசு,

பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

வெற்றி பெறும் படைப்புகளில் உள்ள விடியோ காட்சிகள் மாவட்ட நிா்வாகத்தால் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றாா்.