தென்காசி
கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீ நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீராமநாம பஜனை, உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் தொடா்ந்து அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தெப்பக்குளத்தை சுற்றிலும் நாம கோஷம் செய்து 1,008 அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா்.
தொடா்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.