தென்காசி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கலந்து கொள்வோம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற கையொப்ப இயக்கத்தினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பே. மதிவதனா, துணை இயக்குநா் (சுகாதாரம்) வி. கோவிந்தன், உதவி இயக்குநா் (ஊராட்சி) விஷாலி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஹரிஹரன், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
