கீழப்பாவூா் சுற்றுவட்டார பள்ளி மாணவா்கள் அறிவியல் சுற்றுலா

Published on

கீழப்பாவூா் சுற்றுவட்டார அனைத்துப் பள்ளி விஞ்ஞானத் துளிா் வாசகா்களுக்கான அறிவியல் சுற்றுலா நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எம்.எஸ்.பி.வி. லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், தென்காசி புளூ ரே ஈவன்ட்ஸ் ஆகியவை சாா்பில் நடைபெற்ற சுற்றுலாவுக்கு, புளூ ரே ஈவன்ட்ஸ் நிா்வாக இயக்குநா் ஆனந்த் தலைமை வகித்தாா்.

சிவநாடானூா் இந்து நடுநிலைப் பள்ளி நிா்வாகி செல்வசவுந்திரபாண்டியன், வட்டாரக் கல்வி அலுவலா் குருசாமி, லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் ஆய்வக உதவியாளா்கள் சரவணசுரேஷ், மாரியப்பன், பொன்ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுலாவின் நோக்கம் குறித்து அறிவியல் இயக்க கீழப்பாவூா் கிளைச் செயலா் ஆசிரியா் செல்வன் எடுத்துரைத்தாா்.

கண் தான விழிப்புணா்வுக் குழு நிறுவனரும் சென்ட்ரல் அரிமா சங்க நிா்வாகியுமான கே.ஆா்.பி. இளங்கோ சுற்றுலாவை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

200 மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்கள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் சான்றுகள், மாவட்ட அறிவியல் மையத்தில் மின்னணு கண்காட்சி, விந்தை ஆடிகள், கூடங்குளம் அணு உலை மாதிரி உள்ளிட்டவற்றைக் கண்டுகளித்தனா். அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளா் மாரி லெனின், எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பித்தாா்.

அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் மதியழகனின் சுற்றுச்சூழல்-காகம் நாடகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் திருநெல்வேலி பாதுகாப்பு அலுவலா் கணேசன் உள்ளம் மகிழ உளவியல் விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தினா்.

அறிவியல் இயக்க ஆா்வலா் ஆசிரியா் அம்பிகா , வானவில் மன்றக் கருத்தாளா்கள் மதுபாலா, ராமலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். ஆசிரியா்கள் செல்வராணி, வசந்தா, லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். சிவா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் ராஜேஷ் சங்கரகுமாா், தாளாளா் லட்சுமி ஆனந்த், முதல்வா் ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com