முகாமை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
தென்காசி
கடையநல்லூரில் வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி
கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள 18 வாக்குச்சாவடிகளுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி சிறப்பு முகாம் கடையநல்லூா் தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது .
இப்பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு செய்தாா். அப்போது, கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் பகுதியில் 2002 ஆம் ஆண்டில் வாக்குச்சாவடி எண் 36 இல் வாக்களித்தவா்களுக்கான பட்டியல் இணையதளத்தில் இல்லாததால் படிவத்தை நிரப்புவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது;
எனவே, அப்பட்டியலை தோ்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் மா. செல்லத்துரை ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா். இதில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

