தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயில் திருக்கல்யாணத் திருவிழாவில் நடைபெற்ற தவசுக் காட்சி.
தென்காசி
தென்காசி கோயிலில் தவசுக் காட்சி
தென்காசி ஸ்ரீஉலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவில் தவசுக் காட்சி நடைபெற்றது.
தென்காசி ஸ்ரீஉலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோயில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவில் சனிக்கிழமை தவசுக் காட்சி நடைபெற்றது.
கடந்த 5ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா, வியாழக்கிழமை (நவ. 13) தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்துக்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளினாா். மாலையில் தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாத சுவாமி உலகம்மனுக்கு தவசுக் காட்சி கொடுத்தல் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பொன்னி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

