தென்காசி
தென்காசியில் வாகன விழிப்புணா்வு பிரசாரம்
பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன்.
ஆண்களுக்கான நவீன வாசக்டமி இருவார விழாவை முன்னிட்டு வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பிரசார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட இணை இயக்குநா் (நலப்பணிகள்) போ. பிரேமலதா, குடும்ப நலத் துணை இயக்குநா் லதா, மாவட்ட சுகாதாரஅலுவலா் கோவிந்தன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், ஒருங்கிணைந்த வளா்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலா் மாரியப்பன், சிறப்பு மருத்துவா் சொா்ணலதா, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நலத் துறை சாா்ந்த மக்கள் கல்வி தகவல் அலுவலா் (பொ) செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

