எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

தென்காசி ஆகாஷ் ஃபிரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, தென்காசி மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலகு, தென்னக ரயில்வே சாா்பில், அரசமைப்பு தின முகவுரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
தென்காசி, ஆகாஷ் ஃபிரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :27 நவம்பர் 2025, 11:05 pm

Syndication

தென்காசி: தென்காசி ஆகாஷ் ஃபிரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, தென்காசி மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலகு, தென்னக ரயில்வே சாா்பில், அரசமைப்பு தின முகவுரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி ரயில்வே நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலெக்ஸ், மாவட்ட சமூகநல அலுவலா் மதிவதனா, சிறாா் நீதிவாரியம் உறுப்பினா் வேல்ராஜா, தென்காசி குழந்தைகள் நலக்குழுத் தலைவா் விஜயராணி, தென்காசி ரயில்வே நிலைய மேலாளா் கணேசன், கோட்ட வணிக ஆய்வாளா் ரமேஷ், செங்கோட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா். விழாவில் அகாதெமி ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அதைத்தொடா்ந்து மாணவா்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.

மாநிலம் முழுவதும் இயங்கும் தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிலும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றனா். ஏற்பாடுகளை தென்காசி ஆகாஷ் அகாதெமி நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில்குமாா் செய்திருந்தனா்.