சுரண்டை நகர திமுக சாா்பில் குழந்தைக்கு தங்க மோதிரம்

Published on

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில், சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தங்க மோதிரம் அணிவித்தாா்.

நிகழ்ச்சிக்கு, சுரண்டை திமுக நகர பொறுப்பாளா் கணேசன் தலைமை வகித்தாா்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் பழங்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com