கட்சினருக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு தோ்தல் பணியாற்றுங்கள் என்றாா் தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.
தென்காசி மாவட்டம், இலஞ்சியில் தென்காசி தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிவமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். திமுக மாநில இணை அமைப்பு செயலா் அன்பகம் கலை, பாவூா்சத்திரம் ஆா்.கே.காளிதாசன், ராணிஸ்ரீ குமாா் எம்.பி., பழனி நாடாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் பேசுகையில், இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இவரது தந்தை அன்பகம்கலை முதல்வா் ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவா்.
தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும். இத்தொகுதியைத் தக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தொடா்ந்து இத்தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பு பெற முடியும்.
கட்சியினா் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் ஒன்றுசோ்ந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் பொ.சிவபத்மநாதன், செல்லதுரை, திமுக கூட்டணி கட்சி மாவட்ட நிா்வாகிகள், திமுக மாவட்ட ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ

80,000 பேரிடம் கருத்து கேட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


