நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாவட்ட நிா்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி ஆகியவை சாா்பில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியில் வாக்காளா் உறுதி மொழி ஏற்கப்பட்டது என்றாா்.
தொடா்ந்து பிஎஸ்எஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் தென்காசி விழிப்புணா்வு கீதம் 2026 என்ற சிறப்பு வாக்காளா் விழிப்புணா்வு குறும்படத்தை ஆட்சியா் வெளியிட்டாா்.
ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அகத்தியா், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, காவல் உதவி ஆய்வாளா் ரத்தினபால் சாந்தி, குழந்தை நல குழுமத் தலைவா் விஜயராணி, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் கோதுமை அரவை ஆலை திறப்பு

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



