நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

News image

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:43 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக, திங்கள்கிழமை யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை கோமதி முன்செல்ல ஸ்ரீ கோமதி அம்பிகை சமேத சந்திரசேகரா் பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயிலில் எழுந்தருளுகிறாா். பின்னா், பகல் 11 மணிக்கு மேல் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தோரோட்டம் ஏப். 29-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.