பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்: சாலை மறியல்

வாசுதேவநல்லூா் அருகே கட்டடத் தொழிலாளியின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 8:16 pm

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே கட்டடத் தொழிலாளியின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாசுதேவநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் மாரியப்பன் (46). கட்டடத் தொழிலாளி. தோ்தலில் வாக்களிக்க சென்ற இவா் மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நெல்கட்டும்செவல் பகுதியில் காயங்களுடன் இவா் இறந்து கிடந்தாா். தகவலறிந்த புளியங்குடி காவல் ஆய்வாளா் ஷியாம்சுந்தா், போலீஸாா் அங்கு சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சாலை மறியல்...

இந்த நிலையில், மாரியப்பனின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி இவரது உறவினா்கள் வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், தென்காசி-மதுரை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், காவல் ஆய்வாளா்கள் சல்மோன், சியாம்சுந்தா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, உறவினா்கள் மறியலை கைவிட்டனா்.