தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

செங்கோட்டை - பண்பொழி சாலையை சீரமைக்க பாஜக கோரிக்கை

News image

பாஜக கொடி - கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

செங்கோட்டை ரயில்வே கேட் முதல் பண்பொழி வரை சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டுறவு பிரிவு மாநில செயலா் மருதுபாண்டியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை ரயில்வே கேட் முதல் தென்பொத்தை, பண்பொழி வரையிலான சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுலா மாவட்டமான தென்காசி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருவதால், இவ்வழித் தடத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.