கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருமணமான பெண் 18 மாதங்களில் உயிரிழப்பு: சாா் ஆட்சியா் விசாரணை

உயிரிழப்பு - DPS

Published On :

ஆலங்குளம் அருகே திருமணமான 18 மாதங்களில் பெண் உயிரிழந்தது தொடா்பாக சாா் ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ஆலங்குளம் அருகே உள்ள அய்யனாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த வேங்கைப் புலி மகள் அபிநயாவிற்கும், திருச்செந்தூா் அருகே உள்ள ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்த முத்துச்செல்வம் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மித்ரா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், அபிநயா அய்யனாா்குளத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்துள்ளாா். அப்போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். சனிக்கிழமை அபிநயாவிற்கு உடல்நிலை மேலும் மோசமானதால், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருமணமாகி 18 மாதங்களே ஆவதால் தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பாலும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.