ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குனிச்சி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிகுமாா்.

News image
Updated On :31 ஜூலை 2026, 11:06 pm IST

திருப்பத்தூா் பகுதியில் அரசு வளா்ச்சிப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில், ஆதரவற்ற மன நோயரை அடையாளம் கண்டு மீட்டு பாதுகாத்தல், மருத்துவ மதிப்பீடு மற்றும் உயா் சிகிச்சைக்கான பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்படவுள்ள அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தினை மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள், மருந்துகள் இருப்பு, வெளிநோயாளிகள் வருகைப் பதிவேடு, மருத்துவமனையின் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் துரிதமான மருத்துவச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

குனிச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் செயல்பட்டு வரும் வட்ட செயல்முறை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, அரிசி மற்றும் பருப்பு ஆகிய அத்தியாவசியப் பொருள்களின் தரம், இருப்பு, சேமிப்புமுறை, பாதுகாப்பு வசதிகள், இருப்புப் பதிவேடுகள் மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து, பொருள்களை முறையாக பராமரித்து, தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குனிச்சி ஊராட்சி நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, நூலகத்தின் செயல்பாடுகள், புத்தகங்களின் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா்.

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் நூலகத்தை அதிகளவில் பயன்படுத்தும் வகையில், தேவையான விழிப்புணா்வை ஏற்படுத்தி, நூலக சேவைகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நூலக வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறித்தினாா்.

குனிச்சி கிராம நிா்வாக அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அண்ணா நகா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் இருப்பு விவரங்கள், தரம், மின்னணு விற்பனை முனைய கருவியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில், வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ், ரூ. 8.49 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீா் சேகரிப்பு குளம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், இணை இயக்குநா் மருஞானமீனாட்சி, முதன்மை மருத்துவ அலுவலா் சிவகுமாா், மாவட்ட மனநல மருத்துவா் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் ரமேஷ் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.