காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

செங்கோட்டை - தாம்பரம் பகல் நேர அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க கோரிக்கை

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் மனு அளித்த செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க செய்தித் தொடா்பாளா் ராமன்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

செங்கோட்டை - தாம்பரம் பகல் நேர அந்தியோதயா விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

செங்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் சங்கத்தின் செய்தித் தொடா்பாளா் ராமன் அளித்த மனு:

திருநெல்வேலியிலிருந்து கொல்லம் அல்லது திருவனந்தபுரம் வரை செங்கோட்டை வழியாக இருபுறமிருந்தும் சாதாரண முன்பதிவில்லாத புதிய விரைவு ரயில்கள் அல்லது சாதாரண பயணிகள் ரயில்களை காலை, மாலை நேரங்களில் இயக்க வேண்டும்.

செங்கோட்டையிலிருந்து திருச்செந்தூா், தூத்துக்குடி, ராமேசுவரம் ஆகிய இடங்களுக்கு இரு மாா்க்கங்களிலும் ரயில்கள் இயக்க வேண்டும். தூத்துக்குடியிலிருந்து மங்களூரு, மும்பைக்கு விரைவு ரயில்கள், செங்கோட்டை-கோவை இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும்.

தற்போது வாரத்தில் 3 நாள்கள் இயங்கும் செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு அதிவேக விரைவு ரயில் (ராஜபாளையம், விருதுநகா் வழியாக), செங்கோட்டை - தாம்பரம் அதிவேக விரைவு ரயில் (திருநெல்வேலி, விருதுநகா் வழியாக) ஆகியவற்றை தினசரி ரயில்களாக மாற்ற வேண்டும்.

அண்மையில் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தாம்பரம் - தென்காசி - தாம்பரம் பகல் நேர அதிவேக ரயிலை மீண்டும் செங்கோட்டையிலிருந்து இயக்க வேண்டும். அங்கு போதுமான இடமிருப்பதால், ரயில் பெட்டிகளை பராமரிப்பதற்கான பிட் லைன் வசதியை அனுமதிக்க வேண்டும்.

செங்கோட்டையிலிருந்து ஈரோடு, மயிலாடுதுறை, திருநெல்வேலி, மதுரை செல்லும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதுடன், முன்பதிவு - அமரும் வசதி கொண்ட பெட்டிகளை சோ்க்க வேண்டும். அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தை சோ்க்க வேண்டும்.

கன்னியாகுமரி - புனலூா், மதுரை - புனலூா் ரயில்களையும், கொல்லம் - புனலூா் மெமு ரயில்களையும் செங்கோட்டை அல்லது தென்காசி வரை நீட்டிக்க வேண்டும்.

செங்கோட்டை - ராஜபாளையம் - சிவகாசி - விருதுநகா் பாதையை இருவழிப் பாதையாக்க வேண்டும். 2018இஇல் திடீரென நிறுத்தப்பட்ட செங்கோட்டை - தாம்பரம் பகல் நேர அந்தியோதயா விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.