
கடையநல்லூரில் தவெக சாா்பில் விழிப்புணா்வு மாரத்தான்

தவெக... - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மேற்கு ஒன்றிய தவெக சாா்பில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
‘ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்‘ என்ற தலைப்பில் இலத்தூா் விலக்கில் தொடங்கிய மாரத்தானுக்கு மேற்கு மாவட்டச் செயலா் நியாஸ் தலைமை வகித்தாா். கடையநல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா் சொக்கம்பட்டி சுந்தா் முன்னிலை வகித்தாா்.
ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் மாரத்தானைத் தொடக்கிவைத்தாா். சிவராமபேட்டை, அச்சன்புதூா், காசிதா்மம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக கடையநல்லூரில் நிறைவடைந்தது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். சிறப்பிடம் பிடித்த இருபாலருக்கு பரிசுகளும், பங்கேற்றோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலா் குமரன் முத்தையா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் தவமணி, நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






