சுரண்டை நகர அதிமுக சாா்பில் சுரண்டையில் தெருமுனைப்பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக அரசின் சாதனைகள், திமுக ஆட்சியின் அவலங்கள், அதிமுக பொதுச் செயலா் அறிவித்த தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
கீழச் சுரண்டை, சுரண்டை காந்தி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்துப் பேசினாா்.
தலைமைப் பேச்சாளா் தீக்கணல் லெட்சுமணன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் தா்மசீலன், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய செயலா் இருளப்பன், பேச்சாளா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் சங்கா் வரவேற்றாா்.
தொடர்புடையது

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சுரண்டையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிதம்பரநகரில் திமுக கூட்டணி தெருமுனை பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


