அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கீழப்பாவூரில் திமுக பொதுக்கூட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 2:09 am

Syndication

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட கீழப்பாவூரில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பரப்புரைப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் பொன். செல்வம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மேற்கு மாவட்டச் செயலா் ரா. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் தொகுதி பாா்வையாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

ஒன்றியச் செயலா்கள் சிவன் பாண்டியன், சிவகுமாா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா்கள், திமுக பேரூா் செயலா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.