நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் இன்று முதல் கருப்பை வாய்புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம்

தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) முதல் கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:44 am

தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 28) முதல் கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசித் திட்டம் தென்காசி மாவட்டத்தில் பிப். 28ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஏடய) பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள காா்டசில் என்ற தடுப்பூசியை ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதுமானது. வெளிச் சந்தைகளில் இத்தடுப்பூசி ரூ. 3,927-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜன. 27ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெறும் முகாம்களில், 14 வயதுக்குள்பட்ட சிறுமிகள் தடுப்பூசி பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.