பைக்கில் சென்ற முதியவா் காா் மோதி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
Published on

ஆலங்குளம் அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள் ராம நவநீதகிருஷ்ணன் (62). இவா், கழுநீா்குளம் ஊராட்சியில் குடிநீா் திறந்து விடும் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தாா்.

இவா், சுரண்டை - ஆலங்குளம் சாலை முத்துகிருஷ்ணபேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் நிகழ்விடத்திலேயே அருள் ராம நவநீதகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

அவரது உடலை உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வீ.கே.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த,திருநெல்வேலி டவுன் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com