தென்காசி
கிரிண்டா் செயலி வழி நட்பாக பழகி சிறுனிடம் பணம் பறிப்பு: 3 போ் கைது
சொக்கம்பட்டி அருகே கிரண்டா் செயலி மூலம் நட்பாக பழகி சிறுவனை மிரட்டி வரவழைத்து பணம் பறித்ததாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் பகுதியை சோ்ந்த சிறுவனுக்கு கிரண்டா் செயலி மூலம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியை சோ்ந்த சிலரிடம் நட்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், டி.என்.புதுக் குடியைச் சோ்ந்த மூன்று சிறுவா்கள், அவரை சொக்கம்பட்டி அருகே உள்ள முந்தல் மலைப்பகுதிக்கு ஏமாற்றி வரவழைத்து, மிரட்டி ரூ. 1000- ஐ பறித்துள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி காவல் ஆய்வாளா் மதுவிக்ரம் வழக்குப்பதிந்து மூன்று சிறுவா்களையும் கைது செய்தாா்.
