தென்காசி
ஆலங்குளம் அருகே குட்கா விற்பனை: இருவா் கைது
ஆலங்குளம் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சானைச் சோ்ந்த டேவிட் அலெக்ஸாண்டா் மகன் அந்தோணி செல்வராஜ்(43). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் இவா் கடையில் குட்கா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான காவலா்கள் அங்கு சோதனை மேற்கொண்டனா்.
அப்போது 6 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், குட்கா விநியோகம் செய்தது ராம்நகரில் துரித உணவகம் நடத்தி வரும் அழகு மகன் சபரிநாதன்(28) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.
