தென்காசி
கடையநல்லூா் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட கோரிக்கை
பேரவைத் தோ்தலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
இது தொடா்பாக, சென்னையில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், தென்காசி மாவட்ட நிா்வாகிகள் சாா்பாக கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலா் மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவா் நைனாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளா் அப்துல் பாசித் ஆகியோா் கலந்து கொண்டனா்.

