எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

பாட்டாக்குறிச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
ஆட்சியரிடம் மனு அளித்த மனிதநேய மக்கள் கட்சியினா்
Updated On :19 ஜனவரி 2026, 8:26 pm

Syndication

தென்காசி அருகே பாட்டாக்குறிச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, தென்காசி நகரத் தலைவா் அபாபில் மைதீன் ஆட்சியரிடம் அளித்த மனு: தென்காசி நகராட்சி, 5ஆவது வாா்டு பகுதியில் பல ஆண்டுகளாக சாலையோரங்களில் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வந்த பல ஏழைக் குடும்பங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளாகினா்.

பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதி மக்கள் மலையான் தெரு அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

அப்போது, அங்கு வந்த பேரிடா் மேலாண்மை மற்றும் மீட்புத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தாா்.

அங்குள்ள சிலருக்கு மட்டும் பாட்டாக்குறிச்சி பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவருக்கும் விரைவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அப்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் நயினாா் முகம்மது, மாவட்டச் செயலா் சலீம், மாநில தொண்டரணி செயலா் கோகோ அலி, ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.