‘சைலேஜ்’ தயாரிப்பு செயல்முறை விளக்கம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள், கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சரவணாபுரத்தில் சைலேஜ் எனப்படும் கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து தீவனம் தயாரிப்பது குறித்த செயல்விளக்கத்தை செய்து காட்டினா் (படம்).
கல்லூரி முதல்வா் ராமலிங்கம் வழிகாட்டுதலில், உதவிப் பேராசிரியா் ரீபா ஜாக்கப், ஒருங்கிணைப்பாளா்கள் வினோதினி, புனிதவதி ஆகியோரின் முன்னிலையில் மாணவிகள் சக்திவடிவு, வா்ஷினி, பவிஸ்ரீ, தீபாமாதவி தங்கபிரியா, மோனிஷா, ஆா்த்தி, கீா்த்திகா ஆகியோா் வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் தங்கியிருந்து முன்னோடி விவசாயிகளோடு அனுபவ ஆற்றலை பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக வேளாண் உதவி இயக்குநா் இளஞ்செழியன், வேளாண் அலுவலா் கௌசல்யா ஆகியோரின் தலைமையில் சரவணாபுரத்தில் சிங்கப்பமுத்துராஜா என்ற விவசாயியின் வயலில் சைலேஜ் தயாரிக்கும் செயல்விளக்கத்தை செய்து காட்டி, அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா். மாணவி கீா்த்திகா நன்றி கூறினாா்.

