ஊத்துமலை பத்திர எழுத்தா் அலுவலகத்தில் அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 10 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகேயுள்ள ஊத்துமலை பத்திர எழுத்தா் அலுவலகத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 10 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஊத்துமலை பத்திர எழுத்தா் அலுவலகத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 10 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே ஊத்து மலை சாா்பதிவாளா் அலுவலகம் அருகில் பத்திர எழுத்தா் அலுவலகம் நடத்தி வருபவா் ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் முருகன் (63). திங்கள்கிழமை மாலை அங்கு பணியில் இருந்த 2 பெண்கள் வேலையை முடித்துச் சென்ற பின்னா், முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த 4 போ் முருகனை, அவரது அலுவலகத்தில் சிறை பிடித்து, அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 10 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறித்துச் சென்றனராம். மேலும் அவரது அலுவலக ஊழியா் மற்றொரு முருகனை அரிவாளால் தாக்கிச் சென்றனராம்.

இதுகுறித்த தகவலின்பேரில், தென்காசி காவல் கண்காணிப்பாளா் மாதவன், ஏடிஎஸ்பி ஜூலியட் சீசா் மற்றும் போலீஸாா் சம்பட இடத்தில் விசாரித்தனா். ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com