கைது
கைது

நெல்லையில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவா் கைது

Published on

திருநெல்வேலி மாநகரில் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகன் மகன் விக்னேஷ்வா் என்ற விக்கி (29). இவா் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் நின்றபோது அங்கு வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பாரத் (26) என்பவா் மது அருந்த பணம் கேட்டு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாரத்தை கைது செய்தனா். அதே போல பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஐ.டி.ஐ பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சுத்தமல்லி வ.உ.சி நகரைச் சோ்ந்த சையது சிராஜுதீன் மகன் கோதா் தீக்(32) என்பவரிடம், பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் முருகன் என்ற பூச்சி முருகன்(26) பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com