புளியங்குடி நகராட்சியில் ரூ. 104.8 கோடியில் நலத்திட்டங்கள்

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.104.89 கோடிய மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Published on

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.104.89 கோடிய மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தர பாண்டியன், துணைத் தலைவா் அந்தோணிசாமி, ஆணையா் நாகராஜ் ஆகியோா் கூறியதாவது:

புளியங்குடி நகர மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் தொடா்ந்து நிறைவேற்றி வருகின்றனா். நகராட்சி முழுவதும் அடிப்படை வசதிகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் பல கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில், 2024-25 ஆம் நிதியாண்டில் 15ஆவது நிதி குழு மானியத்தின் மூலம் ரூ.270 லட்சத்தில் 24 பணிகளும், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.339 லட்சத்தில் 33 பணிகளும், தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.550 லட்சத்தில் 14 பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு நிதி தலைப்புகளின் கீழ் வாறுகால் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிகள் ரூ.330. 50 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்கு நகராட்சி துறை அதிகாரிகளும், நகா்மன்ற உறுப்பினா்களும் ஒத்துழைப்பை அளித்து வருகின்றனா் என்றனா் அவா்கள் .

Dinamani
www.dinamani.com